ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன்
*ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!*
பெஸ்டி பிக்சர்ஸ் தயாரிப்பில் காமெடி, காதல், நட்பு, குடும்பம் கலந்த கலர்ஃபுல் என்டர்டெய்னர்!
இன்றைய ஜென்-ஸி தலைமுறையின் fun, friendship, love மற்றும் family vibe-ஐ மையமாகக் கொண்டு உருவாகும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு 24.08.26 நேற்று சிறப்பு பூஜையுடன் உற்சாகமாக தொடங்கியது.
பெஸ்டி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம், இன்றைய இளம் தலைமுறையின் வாழ்க்கை முறை, நட்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் அவர்களைச் சுற்றி நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகிறது.
சாதாரண விஷயங்கள்… செம கலாட்டா!
நம்மைச் சுற்றி தினமும் நடக்கும் விஷயங்கள் எல்லாமே சாதாரணமானவைதான். ஆனால் சரியான மனிதர்கள் ஒன்று சேர்ந்து, சூழ்நிலைகள் எதிர்பாராத விதமாக திரும்பும்போது… அந்தச் சாதாரண விஷயங்களே செம கலாட்டாவாக மாறிவிடும்!
அப்படிப்ப...
