ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம்
*ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !*
ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.
தேஜாவு, வித்தைகாரன் படங்களை தயாரித்த White Carpet Films சார்பில் K. விஜய் பாண்டி மற்றும் Redacted Studios சார்பில் Shanjan G. ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். The Show People சார்பில் ஆர்யா இப்படத்தை வழங்குகிறார்.
‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய SY கௌதம்ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
ஃபேமிலி ரோம் காம் எண்டர்டெயினராக உருவாகும் இப்படம், Gen Z தலைமுறை, 2K தலைமுறை மற்றும் 90-களில் வளர்ந்த தலைமுறை ஆகியோருக்கு இடையிலான உறவுகளையும், அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங...