தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜியின் அடுத்த
'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜியின் அடுத்த திரைப்படத்தின் பூஜை !
'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜி இயக்கத்தில்
சித்து- தர்ஷிகா நடிக்கும் 'தி லாஸ்ட் கேஸ்' (The Last Case) திரைப்படத்தின் தொடக்க விழா!
அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் 'தி டார்க் ஹெவன் ' . அந்தப் படத்தை பிக்பாஸ் புகழ் முகங்கள் சித்து, தர்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் பாலாஜி இயக்கியிருந்தார். அது ஒரு கிரைம் திரில்லராக உருவாகியிருந்தது. அதே இயக்குநர் பாலாஜி தனது அடுத்த முயற்சியாக 'தி லாஸ்ட் கேஸ்' என்கிற படத்தைத் தொடங்குகிறார். இப்படத்தையும் அதே ட்ரீம் 7 சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கிறது.
இப்படத்திலும் முந்தைய படத்தில் நடித்த சித்துவே நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தர்ஷிகா நடிக்கிறார் .மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட குணச்சித்திர நடிகர்கள் நடிக்கிறார்கள் .இந்தப் படத்தின் பூஜை இன்ற...
