பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் & சினிமா டூர் என்டர்டெயின்மென்ட்
*பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் & சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 3' படத்தின் தொடக்க விழா*
பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் & சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சரத் பாபு மற்றும் இணை தயாரிப்பு சூர்யா தேவி இணைந்து
தயாரிப்பில் காளி வெங்கட் நடிப்பில் அறிமுக இயக்குநர் பா.விஜய் கார்த்திக்கேயன் இயக்கத்தில் தயாராகும் ' புரொடக்ஷன் நம்பர் 3' படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் பா.விஜய் கார்த்திக்கேயன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் காளி வெங்கட், ரேஷ்மா முரளிதரன், ஜென்சன் திவாகர், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெயபிரகாஷ். விஜே பாரு, வினோதினி, சரத் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமை...
