பெரும் பாராட்டுகளைக் குவித்த ‘சிறை’ திரைப்படம்
*பெரும் பாராட்டுகளைக் குவித்த ‘சிறை’ திரைப்படம் – ஜனவரி 23 முதல் ZEE5 தமிழில் பிரீமியர் ஆகிறது!!*
*"சிறை" திரைப்படம் வரும் ஜனவரி 23 முதல் ZEE5 தமிழில் ஸ்ட்ரீமாகிறது!!*
ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடித்த சமீபத்திய பொங்கல் பிராண்ட் திரைப்படம் உள்ளிட்ட பல வெற்றிகரமான ஒரிஜினல் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களுக்குப் பிறகு, தமிழ் ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில் பெரும் பாராட்டுகளைக் குவித்த கிரைம் – நீதிமன்ற டிராமா திரைப்படமான "சிறை" திரைப்படம் ஜனவரி 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகிறது. இப்படத்தை இயக்குநர் தமிழ் கதையை மையமாக வைத்து, அவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. Seven Screen Studio சார்பில் S.S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில், விக்ரம...