Saturday, October 24

Tag: *முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில்

*முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில்
FIRST LOOK, TAMIL, TAMIL SERIES, TAMILNADU

*முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில்

*முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும்  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!* செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. SSR Entertainment சார்பில் K I சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் முகேன் ராவ் (Mugen Rao) கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முகேன் ராவ் அடர் நீல நிற லெதர் ஜாக்கெட் அணிந்து கம்பீரமாக நிற்க, அவருக்கு அருகில் தங்க நிறத்திலான செல்ல நாய் இடம்பெற்றுள்ளது. மலைப்பகுதியையும் இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்ட போஸ்டரில், ‘MORE THAN A PET A SILENT WITNESS’ என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது படத்தின் மர்மம் நிறைந்த கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ...