ராஜஸ்தானில் நடைபெற்ற விபத்தில் மரணமடைந்த
*மறைந்த தயாரிப்பாளர் திரு. ஆர். பி. சௌத்ரி அவர்களுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி*
ராஜஸ்தானில் நடைபெற்ற விபத்தில் மரணமடைந்த தயாரிப்பாளர் திரு. ஆர். பி. சௌத்ரி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி நடிகர் உதயா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இந்தத் துயரச் செய்தியைக் கேட்டது முதல் பேச இயலாத நிலையில் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை திரு. ஆர்.பி. சௌத்ரி அவர்கள் எனது முதல் தயாரிப்பாளர், எனது வழிகாட்டி மட்டுமல்ல, அவர் ஒரு தெய்வத் திருவுருவம். இன்று நான் ஒரு நடிகனாக உங்கள் முன் நிற்கிறேன் என்றால், அதற்கு மிக முக்கியமானக் காரணம் திரு. ஆர்.பி. சௌத்ரி அவர்கள் "உதயாவை நான் அறிமுகப்படுத்துகிறேன்" என்று கூறி, கடந்த 2000-ம் ஆண்டு வெளியான 'திருநெல்வேலி' திரைப்படத்தின் மூலம் என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் பல இயக்குநர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்...
