வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 01’
வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 01’ – முதல் கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது!
‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘புரொடக்ஷன் நம்பர் 01’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் திரைப்படத் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில் தேஜய் அருணாசலம் கதாநாயகனாக நடிக்கிறார். திவிஜா பிரபாகர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை வாலி மோகன் தாஸ் தயாரித்து இயக்குகிறார். படத்தின் எழுத்துப் பணிகளை வாலி மோகன் தாஸ் மற்றும் உமர் எஸ். இணைந்து மேற்கொண்டு...
