விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு
*விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, ZEE5 தமிழ் தனது அடுத்த பெரிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக 'நூறு சாமி'யை அறிவித்துள்ளது*
*'பரிமளா & கோ'வின் அபார வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆகஸ்டில் குடும்பங்கள் ரசிக்க இன்னொரு திரைப்படத்தை கொண்டு வருகிறது ZEE5 தமிழ்*
சென்னை, ஜூலை 24, 2026: விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, இதயத்தைத் தொடும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமான 'நூறு சாமி' இந்த ஆகஸ்டில் ZEE5 தளத்தில் OTT-யில் பிரீமியராக வெளியாகவுள்ளதாக ZEE5 தமிழ் அறிவித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த அறிவிப்பு ZEE5 தமிழுக்கு மிகவும் உற்சாகமான தருணத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் OTT-யில் வெளியான 'பரிமளா & கோ' குடும்ப பார்வையாளர்களின் விருப்பமான திரைப்படமாக உருவெடுத்துள்ளது. ஜெயராம் மற்றும் ஊர்வசி நடித்த இந்த மிகவும் எதிர்பார்க்கப்ப...
