ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் தியேட்டர் அல்லாத இந்தி வியாபாரத்தில் பல சாதனைகளைப் புரிந்துள்ளது!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் தியேட்டர் அல்லாத இந்தி வியாபாரத்தில் பல சாதனைகளைப் புரிந்துள்ளது!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் டிசம்பர் 6, 2024 அன்று வெளியாவதை இந்திய திரையுலகமும் ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். படம் பற்றிய சின்ன சின்ன அப்டேட் கூட ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்து வருகிறது. அந்த வகையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா, 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் தியேட்டர் அல்லாத இந்தி வியாபாரம் ரூ. 250 கோடிக்கு நடந்துள்ளதாக கூறியிருக்கிறார். இதில் ஓடிடி, சேட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமம் ஆகியவையும் அடங்கும்.
சமீபகாலமாக தியேட்டர் வசூல் குறைந்துள்ள சூழ்நிலையில், 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் ‘கேஜிஎஃப்2’ திரைப்படத்தை விட பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை ஈட்டித் த...
