Romeo Pictures ராகுல் – Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து
*Romeo Pictures ராகுல் – Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் புதிய திரைப்படம் – இளைய திலகம் பிரபு, விஜய் வர்மா நடிப்பில் பூஜை நடைபெற்றது*
Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் 'DC' படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில் திரில்லர் - காமெடி திரைப்படமாக உருவா...
