Tam’s consultancy தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்
Tam's consultancy தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தமிழ்வாணன் அவர்கள் தயாரித்து நடிக்கும் 'Production no : 2' திரைப்படம், 2017 ஆம் ஆண்டு போங்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் தாஜ் அவர்களால் இயக்கப்படுகிறது.
மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைக்கும் இப்படமானது, இம்மக்களுக்கு நடந்த அநீதியை உண்மை தன்மை மாறாமல் உருவாக்கப்பட்டது.
இத்திரைப்படமானது இவர்களின் வாழ்வில் பொதுவுடைமை கொள்கையின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை இந்த மக்களின் குரலாக உணர்வுபூர்வமாக காட்டப்பட்டுள்ளது
கதையின் அமைப்புபடி 2010 காலகட்டத்தை சுட்டிக்காட்டும் வகையில் கதை இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் இவர்கள் மாதிரியான பின்தங்கிய நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் வாழ்கையில் படிப்பு மற்றும் விளையாட்டின் மூலம் ஊடுறுவும் இடஒ...
