Tuesday, December 10

தமிழ்ப்பேராயம் விருதுகள் 2024 அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு

தமிழ்ப்பேராயம் விருதுகள் 2024 அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தமிழ்பேராயம் விருதுகள் 2024 அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி வேந்தர் கலையரங்கத்தில் நடைபெற்றது.

தமிழ்ப்பேராய அமைப்பு

தமிழகம் எங்குமுள்ள சிறந்த தமிழறிஞர்கள், படைப்பாளிகள், அரசு சார் தமிழமைப்புகளின் தலைவர்கள், ஆகியோர்களைக் கொண்ட குழுக்களின் அறிவுரைகளின்படி தமிழ்ப்பேராயம் இயங்குகிறது. இது விருப்பு, வெறுப்பற்ற நடுநிலையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை உலக முழுவதும் உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது தமிழ்ப்பேராயம்.

தமிழ்ப்பேராயத்தின் பணித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ்ப்பேராய விருதுகள் திட்டம். 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பன்னிரண்டு தலைப்புகளில் சிறந்த தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் மற்றும் சீரிய தமிழ்ப் பணியாற்றும் தமிழ் இதழ்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்கள் பயன்பெறும் விதத்தில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரையில் 2.5 கோடி அளவிலான பரிசுத் தொகை இதற்காக வழங்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 88 படைப்பாளர்கள் விருது பெற்றுள்ளனர்.

அந்த வகையில் இந்தாண்டுக்கான உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துடன் இணைந்து 12வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஏப்ரல் 2025 இல் நடைபெற உள்ளது. தமிழ் அறிஞர்கள், புலவர்கள் மற்றும் புரவலர்களின் பெயரில் ரூ. 24,00,000 பெறுமான 12 ஆய்விருக்கைகள் தொடங்கப்படவுள்ளன. செவ்வி என்ற காலாண்டு ஆய்விதழ் விரைவில் வெளிவரவுள்ளது. தொல்காப்பியக் குறுநூல்கள் வெளியிடப்படவுள்ளன.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டியின் பதிவாளர் பொன்னுசாமி, தமிழ்பேராய தலைவர் கரு.நாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை அறிவித்தனர். மேலும் நிகழ்ச்சியின் இறுதியாக ஜெய்கணேஷ் நன்றி உரை நிகழ்த்தினார்.