Saturday, December 6

மாண்புமிகு தமிழக முதல்வர், திரு. M.K. ஸ்டாலின்

Ref: TFAPA/1137/2025

நாள்: 02-06-2025

பெறுநர்,
மாண்புமிகு தமிழக முதல்வர்,
தரு. M.K. ஸ்டாலின் அவர்கள்,
தலைமை செயலகம், சென்னை.

பொருள்: தமிழக அரசின் திரை ப்பட விருதுகள் மற்றும் திரை ப்படங்களுக்கான மானியங்கள் – 2016 முதல் 2022 வரை நிலுவை யில் உள்ளது குறித்து

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தயாரிப்பாளர்களின் பணிவான வணக்கம்.

தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து, தமிழ் திரைப்படங்களின் வளர்ச்சிக்கு உதவியதற்கு தங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறும் இந்த தருணத்தில், தமிழ் திரைப்படங்களுக்கான, தமிழக அரசின் விருதுகள் மற்றும் தமிழக அரசின் மானியம் வழங்குவதற்கு 2016 வருடம் முதல் 2022 வரைக்கான, விண்ணப்பங்கள் பெறப்பட்டு திரைப்படங்களும் அரசு உருவாக்கிய குழுக்குள் மூலம் பார்க்கப்பட்டன. ஆனால், இந்த ஏழு வருடத்திற்கான விருதுகளும், மானியங்களும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தமிழ் திரைப்பட துறையை சார்ந்த பல கலைஞர்களும், தயாரிப்பாளர்களும், தமிழக அரசின் விருதுகளுக்காகவும், அரசு வழங்கும் மானியத்திற்காகவும் பல வருடங்களாக காத்திருக்கிறார்கள்.

தமிழ் நாட்டை பல துறைகளில் ஒரு முன்னோடியான மாநிலமாக மாற்றி, “எல்லோருக்கும் எல்லாம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சிறப்பாக இயங்கி வரும் தங்களின் தலைமையிலான தமிழக அரசு, தமிழ் திரைப்பட துறைக்கு, நிலுவையில் உள்ள ஏழு வருடத்திற்கான தமிழக அரசின் விருதுகளையும், திரைப்படங்களுக்கான மானியத்தையும் விரைவில் வழங்கி, திரைப்படத் துறையும் வளர்ச்சி அடைய உதவுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

2025-ம் வருடத்தின் ஐந்து மாதங்கள் முடிந்த நிலையில், 2023 மற்றும் 2024 வருடங்களுக்கான தமிழக அரசின் விருதுகள் மற்றும் மானியத்திற்கான அறிவிப்புகள் இன்னமும் வெளியிடப்படவில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். அவைகளும், துரிதமாக அறிவிக்கப்பட்டு, விருதுகளும், மானியமும் இந்த இரண்டு வருடங்களுக்கும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.

T.G. தியாகராஜன்
செயல் தலைவர்

T. சிவா
பொதுச் செயலாளர்

G. தனஞ்ஜெயன்
பொருளாளர்

S.R. பிரபு – S. வினோத் குமார்
துணைத் தலைவர்கள்

S.S. லலித் குமார் – சுரேஷ் காமாட்சி: இணைச் செயலாளர்கள்
மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்,
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம்

c.c.: மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர்

c.c.: மாண்புமிகு திரு. M.P. சாமிநாதன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்.