Saturday, April 25

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி!

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச் சி!

போலீசாக நடித்த அனுபவம் : நடி கர் நகுல் பேச்சு

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச் சி!
நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித் திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன் ‘.இப்படத்தை பாலாஜி இயக்கியுள் ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத் தை இயக்கியவர். கோதை என்டர் டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயா ரித்துள்ளன.

இப்படத்தின் சிறப்பு அறிமுக நிக ழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நடிகர் நகுல், இயக்கு நர் பாலாஜி மற்றும் படக்குழுவி னர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் பாலாஜி பேசும்போது,

“இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சசி குமார் சார் இன்று வெளியிட்டார். எனது முதல் படத்திற்கும் அவர் தான் வெளியிட்டார்,அவரிடம் நான் உரிமையாகக் கேட்டபோது அவர் வெளியிட்டு உதவியுள்ளா ர்.அந்த அளவிற்கு நான் அவரிடம் உரிமை எடுத்துக் கொள்வேன்.

இந்தப் படம் ரொம்ப நன்றாக வந் திருக்கிறது. நகுலுக்கு இதில் நல் ல பெயர் கிடைக்கும். இதில் நடித் துள்ள இன்னொரு நடிகர் அலெ க்ஸ் . அவருக்கும் நல்ல பெயர் கி டைக்கும். மூன்று காலகட்டத்தில் மூன்று தோற்றங்களுக்கு அவர் மாற வேண்டி இருந்தது .அவர் அவ்வளவு உழைத்துள்ளார்.

நகுலைப் பல படங்களில் பார்த்தி ருக்கிறோம். இதுவரை பார்த்து வ ந்த நகுல் வேறு. இதில் வேறு மாதி ரியாக நகுலைப் பார்ப்பார்கள். டி3 படம் முடித்த பிறகு எனக்கு தோன் றியது ஒன்றுதான், இது தப்பான படம் இல்லை என்று தோன்றிய து. அது கோவிட் கால கட்டத்தில் போராடி எடுத்த படம்.

ஒரு படம் வரவில்லை,வெற்றி பெ றவில்லை என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கும். அதற்கு மு க்கியமான காரணம் படத்தை நல் ல விதமாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அது மி கவும் முக்கியம். ஏனென்றால் கட வுளுக்கே விளம்பரம் தேவைப்ப டும் காலம் இது. இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தையும் நல் ல முறையில் மக்களிடம் கொண் டு சேர்க்க வேண்டும். இதில் நாட் டார் கதையை வைத்து ஒரு திரில் லராக உருவாக்கி இருக்கிறோம். இந்த திரில்லர் வேறு மாதிரியாக இருக்கும். முதலில் இந்தப் படத் தை எடுக்கலாமா என்று யோசித்த போது காந்தாரா படத்தின் வெற்றி எனக்குப் பெரிதும் நம்பிக்கை அ ளித்தது.

படத்தில் ஆங்கிலத் தலைப்பை வைத்ததைப் பற்றிக் கேட்கிறார் கள். படத்திற்குப் பொருத்தமாக இருப்பதால் தான் அப்படி வைத் தோம். வேறு வழி இல்லை. மற்றப டி தமிழில் வைக்கக் கூடாது என் று எந்த உள்நோக்கமும் கிடையா து.

என்னைப் பொறுத்தவரை ஒரு இயக்குநருக்கு முடியாது என்று எதையும் சொல்லக்கூடாது என்று நினைப்பவன். நகுல் ஒரு கதாநா யகனுக்குரிய நடிகர். ஆனால் அ வரிடம் இருந்து அந்த கதாநாயகத் தனத்தை இன்னும் சரியாக வெளி யே கொண்டு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நகுல் இ ந்தப் படத்தில் சொன்னபடி எல் லாம் கேட்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவருக்குக் கதை தெரியுமா என்று கூடத் தெரியவில் லை .அந்த அளவிற்கு அவர் ஒத் துழைப்பு கொடுத்தார். இந்தப் பட ம் எல்லா காவல் தெய்வங்களை யும் நினைவுபடுத்தும். சிறுவய தில் கேட்ட கேள்விப்பட்ட அனுப வங்களை வைத்து தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். . பட்ஜெட் படமாக ஆரம்பித்தது ஆ னால் செலவு ஏழரைக் கோடி தாண்டி விட்டது. இந்தப் படம் நிச் சயமாக தப்பு பண்ணாது. அனை வருக்கும் பிடிக்கும். எனவே இந்த ப் படத்தின் மீது அதிக நம்பிக்கை யுடன் இருக்கிறோம்” என்றார்.

இதில் கதாநாயகனாக காக்கி உ டை அணிந்து நடித்திருக்கும் நடி கர் நகுல் பேசும் போது

”இதில் நான் போலீசாக நடித்திருக் கிறேன் . நான் சினிமாவிற்கு வந் து இப்போதுதான் முதல் முறை யாக இப்படி நடிக்கிறேன். எனவே முதலில் கொஞ்சம் பதற்றமாக இ ருந்தது. எனக்குச் சின்ன வயதில் இருந்து ராணுவத்தில் சேர வேண் டும் என்று ஆசை. காக்கி யூனிபா ர்ம் மீது எனக்கு ஒரு காதல் உண் டு.

நான் நடிக்க வந்து 20 ஆண்டு ஆ கிவிட்டது என்று இங்கே கூறினா ர்கள். நன்றி. ஆனால் நான் எதை யுமே செய்யாதது போல் இருக்கி றது. இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. நான் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தான் ந டிக்க வந்தேன்.இப்படி நடிக்க வே ண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு அப்போது இ ல்லை. படிப்படியாக இப்போது 20 ஆண்டு கடந்து விட்டேன்.என் னை வளர்த்து ஆளாக்கி விட்ட வர்கள் நீங்கள் தான் .என் நன்றிக் குரியவர்கள் முன்னால் நான் இப் போது நிற்கிறேன். மிக்க நன்றி.

இப்போதுதான் ஆரம்பித்து இருக் கிறேன் .சினிமா எனது வாழ்க்கை ,நான் கடந்த காலத்தை பற்றிக் க வலைப்படுவதில்லை. அதை நி னைத்துப் பார்ப்பதில்லை .இன் றைய இந்தத் தருணத்தை மட்டு மே இனிமையாக்க வேண்டும் என் று தான் நினைப்பேன். எதிர் கால த்தைப் பற்றி நான் நினைப்பதில் லை .ஒவ்வொரு நாளும் சிறு சிறு முன்னேற்றத்தைக் காண்கிறேன். ஒவ்வொரு நாளும் கேமரா முன் நி ற்கும்போது நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. சிறுவயதில் யூனிபார்ம் மீது என க்கு ஒரு ஆசை ஒரு கிரேஸ் இருந் தது. ராணுவம் போலீஸ் மூவி செ ய்ய ஆசை. ஏற்கெனவே கமல் சார் சூர்யா சார் என்று எல்லாம் ஒரு அ டையாளமாக உருவாக்கி வைத் திருக்கிறார்கள். சினிமாவில் போ லீஸ் என்றால் ராகவன் , அன்புச் செல்வன் என்று பாத்திரங்கள் நி னைவுக்கு வருகின்றன. அந்த வ ரிசையில் இளம் பாரியும் இருக்கு ம்.

என் மீது நம்பிக்கை வைத்து பா லாஜி அழைத்த போது எனக்கு ஆ ச்சரியமாக இருந்தது. நான் பட்ஜெ ட்டை விட ஸ்கிரிப்டை முக்கிய மாகப் பார்ப்பேன். நல்ல கதைதா ன் படத்திற்கு முக்கியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. நான் முடிந்த அளவிற்கு அனைவ ரையும் கவரும்படி இதில் நடித்து ள்ளேன் என்று நம்புகிறேன். நான் இயக்குநர் பாலாஜியிடம் நிறைய கேள்வி கேட்பேன். எனக்குத் தெ ளிவாகும் வரை,விடமாட்டேன் கே ட்டுக் கொண்டே இருப்பேன். ஆ னால் பாலாஜி எப்போது கேட்டா லும் பதில் சொல்வதில் தெளி வா க இருந்தார்.படப்பிடிப்பின் போது தனக்குத் தேவையானதை வாங் கிக் கொள்வதில் அவர் சமரசம் இ ல்லாமல் இருந்தார்.
அப்படியே இப்படத்தை முடித்து இருக்கிறார். திரைக்கதை நடிப்பு எல்லாமும் நன்றாக வந்திருக்கிற து.

இது மாஸ் ஆக்சன் படம் போல் இ ல்லாவிட்டாலும் பாபநாசம் படத் தைப் பார்த்த அந்த உணர்வு ஏற்ப டும்.

என்னை நினைத்தால் எனக்கே வேடிக்கையாக இருக்கும் . நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன் .நான் ஒரு தனிமை விரும்பி ,யாரி டம் அதிகம் பேச மாட்டேன்.ஆனா ல் உடன் பேசுவரின் மனநிலை அ றிந்து அதன்படி பழகுவேன்.
நான் முன்பே சொன்னேன் ராணு வத்தின் சேர வேண்டும் என்று ஆ சைப்பட்டேன் என்று.அப்படிச் சா தாரணமாக நினைத்து விட முடி யாது. அதற்கு ஒரு தைரியம் இரு க்க வேண்டும்; லட்சியம் இருக்க வேண்டும்; தேசப்பற்று இருக்க வேண்டும்.உடல் தகுதி வேண்டும்.

இப்படிப்பட்ட பாத்திரத்தில் நடிக் க, யூனிபார்ம் போட்டால் மட்டும் போதாது .ஒரு டிராபிக் கான்ஸ் டபிள் ஆக இருந்தால் கூட அந்த யூனிஃபார்முக்கு ஒரு மரியாதை, சக்தி இருக்கிறது . அதை அணி ந்த பிறகு வேறு மாதிரியான கம் பீர உணர்வு நமக்கு வரும்.அதை நடித்த போது உணர்ந்தேன். நம் மைப் பார்த்து ஒருவர் சல்யூட் அ டிக்கும் போது நாம் உணர்வது வே று வகையிலானது. நான் இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் போது சிரி த்ததே கிடையாது. யூனிஃபார்ம் அ ணிந்தவர்களின் குறிப்பாக போ லீஸ் காவல்துறையின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்கள் எப்ப டி வேலையே வாழ்க்கையாக இரு க்கிறார்கள். அது சுலபமானதல்ல .அவர்களுக்கு விடுமுறையே கி டை யாது எங்கும் எப்போதும் இரு ப்பார்கள். 100க்குப் போன் செய் தா ல் ஐந்து நிமிடத்தில் பேட்ரல் வண் டி வந்து விடுகிறது.ஸ்காட்லாந்து யார்டுக்குப் பிறகு தமிழ்நாடு போ லீஸ் தான் என்பார்கள். அப்படி நான் இந்த இளம்பாரி கதாபாத்திர த்தில் நடித்ததில் மிகவும் பெரு மைப்படுகிறேன். நான் அந்தப் பெயரையே நேசிக்கிறேன். காதலு டன் நான் சினிமாவில் இருக்கிறே ன் ரசித்து ரசித்து செய்கிறேன். இ ன்னும் என்னவெல்லாமோ செ ய்ய வேண்டும் என்று ஆசைகள் உள்ளுக்குள் நிறைய உள்ள ன.இ ந்தப் படத்தில் நடித்த போது ஒரு கிரிக்கெட் டீம் போல இருந்தோ ம். வெங்கட் பிரபு சாரின் சென்னை 28 குழுவினர் போல் நாங்கள் இரு நதோம். இதில் புதிது புதிதாக நடித் தவர்கள் எல்லாம் ஊரிலிருந்து வ ந்திருக்கிறோம் சினிமா வெறி யோ டு வந்திருக்கிறோம் என்றார்கள். அப்படி அனைவரும் ஒத்துழை ப்பு கொடுத்து நடித்தார்கள், பணி யாற்றினார்கள்” என்றார்.

நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதி வாளர் மணிகண்டன், இசைய மைப்பாளர் சக்தி பாலாஜி ஆகி யோருடன் படத்தில் நடித்தவர்க ளும் சின்னத்திரை, யூடியூப் என் று தனக்கான தனிப்பாதையில் பயணம் செய்து வளர்ந்து வரும் கலைஞர்களான
அலெக்ஸ் , அந்தோணி, கோதை சந்தானம், சரண்,கேசவன், பிரதீ ப்,சிவா ருத்ரன் ஆகியோரும் கலந் து கொண்டு பேசினார்கள். இந்தப் படம் விரைவில் வெளிவர உள்ள து.

டி 3 படத்திற்காகப் பட்ட கடனுக் காகத் தனது காரை விற்றிருந்தார் இயக்குநர் பாலாஜி. இந்தப் படத் தில் இலங்கையில் இருந்து வந்து நடித்திருந்த நடிகர் சரண், அந்தக் காரை வாங்கியிருந்த வரிடம் தே டிப் பிடித்து மீட்டு எதிர்பாராத வ கையிலான தனது அன்புப் பரிசா க அந்தச் சாவியை இயக்குநர் பா லாஜியிடம் அளித்தார்.
பாலாஜி நெகிழ்ச்சியால் கண்ணீர் விட்டார் .விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஒருகணம் ஸ்தம் பித்து நின்றனர்.