தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க
*அக்டோபர் 25, 2025*
*தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க (TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் (ANNUAL GENERAL BODY MEETING) எடுக்கப்பெற்ற சில முடிவுகள்*
1. VPF Payment - கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் VPF கட்டணத்தை Qube, UFO, PRO VA, Sony மற்றும் இதர டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்களுக்கு வாராவாரம் கொடுத்து வருகிறார்கள். ஆனால், அதே ப்ரொஜெக்டரில் திரையிடும் ஆங்கில மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு பல வருடங்களாக அவ்வாறு VPF கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த பாகுபாட்டை (Discrimination in charging VPF for Tamil film) டிஜிட்டல் நிறுவனங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே, ஏப்ரல் 1, 2026 முதல் VPF கட்டணம் வசூலிப்பதை டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டு கொள்கிறது. One Time Conte...








