இன்றைய இயக்குநர்கள் கத்தி, ரத்தம், சத்தம் என
‘இன்றைய இயக்குநர்கள் கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் படம் எடுக்க வருகிறார்கள்’ ; இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வேதனை
அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் சார்பில் TS.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் த.ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”.
ஆண்டனி கதாபாத்திரத்தில் பூவையார், அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோர் நடித்துள்ளனர்,. மேலும், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, சௌந்தர்ர்ராஜா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன், பிக் பாஸ் அர்ணவ் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜய்குமார் நடிக்கிறார்..
டி.ஆர்.கிருஷ்ண சேட்டன் இந்தப்படத்திற்கு இசையமை...