ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் வாழ்க்கையைச் சொல்லும்
*ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் வாழ்க்கையைச் சொல்லும் புதிய பயோபிக் – பத்திரிகையாளர் சந்திப்பு !!*
ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சாய் பாதானந்தா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், முதலில் பத்திரிகையாளர்களுக்காக படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில் தியாகராஜன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
‘சாய் பாதானந்தா’ திரைப்படம் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கைச் சரிதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1906-ம் ஆண்டு திருச்சி அருகே உள்ள பொய்யாமணியில் பிறந்த ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி, தெய்வத்தைத் தேடி அலைந...


