Sunday, September 8

PITHA MOVIE REVIEW

சிவராஜ் தயாரிப்பில் சுகன் குமார் இயக்கத்தில் ஆதேஷ் பாலா,அருள்மணி, அனு கிருஷ்ணா, ரெஹானா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பிதா. இப்படம் 23 மணி நேரம் 23 நிமிடத்தில் எடுத்து இருக்கும் படம்.
Edit Image

கதை
 
ஊரில் கோயில் திருவிழா உற்சாகமாக நடந்துகொண்டிருக்கும் இரவு நேர பெருங்கூட்டத்தில் அனுகிரஹா தன் தொலைந்துபோன தம்பியைத் தேடியலைகிறாள்.
இன்னொரு பக்கம்,, 25 கோடி ரூபாய்க்காக பணக்காரரான அருள்மணியை கடத்தி பணம் பறிக்க நினைக்கிறார்கள் திட்டமிட்டு, அதேஷ்பாலா குழு. அவர்களிடம் தம்பியை தேடும் அனுகிரஹாவும் சிக்கிக் கொள்ள, கும்பலின் அல்லக்கைகள் அவளை அனுபவிக்கத் துடிக்கிறார்கள்.
இப்படி பரபரப்பு பற்றிக் கொள்ளும் நிரைக்கதையில்,
அனுகிரஹாவின் நிலைமை என்னாச்சு? கடத்தப்பட்ட அருள்மணியிடமிருந்து 25 கோடி கைப்பற்றினார்களா? திருட்டுப் பேர்வழிகளிடமிருந்து அருள்மணி தப்பித்தாரா? காணாமல் போன தம்பி கிடைத்தானா? என்பதே படத்தின் சுவாராஸ்யமான மீதிக்கதை.
 
காதலனுடன் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி தன் அம்மா தம்பிக்காக வாழும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார் அனுகிருஷ்ணா.
வில்லனாக ஆதேஷ்பாலா. தொழிலதிபரை மடக்கிப் பிடிக்கும்போதும், அவரிடம் பணம் கேட்டு மிரட்டும்போதும் வெறித்தனம் காட்டியிருப்பவர், கடத்தலுக்கு ஐடியா கொடுத்தவனே ஆப்பு வைக்கும்போது அடங்கி ஒடுங்கி தன் பங்களிப்பில் நிறைவான நடிப்பை தருகிறார்.
சாம்ஸுக்குர மெல்லிய வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு. அதில் தனது வழக்கமான நகைச்சுவையை கலந்து ஓரளவு கலகலப்பூட்டியிருக்கிறார்.
நாயகி அனுகிருஷ்ணாவின் காது கேட்காத, பேசும் திறனற்ற தம்பியாக தர்ஷித்( இயக்குநர் சுகனின் மகன்) இயல்பான தோற்றத்திலேயே, நடித்து கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். வில்லன்களிடம் சிக்கிய அக்காவை மீட்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் கவனிக்க வைக்கிறார் அந்த குட்டிச் சிறுவன் தர்ஷித். அருள்மணியின் மனைவியாக வருகிற ரெஹானா கொடுக்கப்பட்ட
கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
அருள்மணியின் கார் டிரைவராக வருகிற சிவாஞ்சி, கிளைமாக்ஸின் டிவிஸ்ட்க்கு உதவியிருக்கிறார்; நடிப்பில் அலட்டல் இல்லாமல் மிரட்டியிருக்கிறார்.
அனுகிருஷ்ணாவின் காதலனாக ஸ்ரீராம் சந்திரசேகர் நன்றாக நடித்துள்ளார். தொழிலதிபராக அருள் மணி, வில்லனின் உதவியாளராக மாரிஸ் ராஜா என இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். திகிலும் திரில்லும் கலந்த பின்னணி இசையைத் தந்து கதையோட்டத்துக்கு உயிரூட்டியிருக்கிறார நரேஷ்.
23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுத்து முடிக்கப்பட்ட இந்த வரலாற்று சாதனைப் படத்தை ஆழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர்.
 
இயக்குநர் எஸ் சுகன்  93 நிமிடங்கள் ஓடும் படத்தை 23 நேரம் 23 நிமிடத்தில் பரபரப்பாக திரைக்கதையமைத்து சுவாராஸ்யமாக சொல்லியதற்கு பாராட்டுக்கள்.
 
இந்த மாதிரி படத்தை தியேட்டரில் பார்த்து ரசிகர்கள் ஊக்குவிக்கலாம்.