Wednesday, January 15

RAAYAN MOVIE REVIEW

SUN Pictures
வழங்கும்,
சன் பிக்சரஸ்
கலாநிதி மாறன்
தயாரிப்பில்…
தனுஷ்
இயக்கத்தில்..
A.R.ரகுமான்
இசையில்..
ஒம் பிரகாஷ்
ஒளிப்பதிவில்…
மாஸ்டர்
பீட்டர் ஹேன்,
சண்டை பயிற்சியில்…
தனுஷ்,
காளிதாஸ் ஜெயராம்,
பிரகாஷ் ராஜ்
சந்தீப் கிஷன்,
S.J.சூரியா,
செல்வராகவன்,
சரவணன்,
துஷாரா விஜயன்,
அனிகா சுரேந்திரன்,
அபர்ணா பாலா முரளி,
வரலக்ஷ்மி சரத்குமார்,
மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ராயன்
கதை
 
காத்தவராயன் ( தனுஷ்) முத்துவேல் ராயன் ( சந்தீப் கிஷன்) மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ் ஜெயராம்) ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களின் ஒரே தங்கை துர்கா ( துஷாரா விஜயன்) . சின்ன வயதில் பெற்றோர்கள் ராயனிடம் குழந்தைகளை பத்திரமாக பார்த்துகொள்ளவும் என்று சொல்லிவிட்டு . செல்கின்றனர். சென்ற தாய், தந்தை வரவே இல்லை. என்ன ஆனார்கள் என்றும் தெரியாமல் பூசாரி வீட்டில் தங்குகின்றனர். பூசாரி தன் தங்கைகயை விற்பதையறிந்து. அவரை கொலை செய்துவிட்டு தம்பிகள் தங்கையுடன் சிறு வயதிலே சென்னைக்கு வருகிறார். செல்வராகவன். உதவியுடன் வேலைக்கு சேர்ந்து தம்பிகள் தங்கைகளை காப்பாற்றிவருகிறார். ராயன் பெரியவன் ஆனதும் ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல் நடத்தி, குடும்பத்திற்கு அண்ணனாக மட்டுமல்லாமல், ஒரு அப்பாவாகவும் இருந்து, தன் இரு தம்பிகளையும், தங்கையையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறான் ராயன்.
 
சென்னையின் பிரபல ரவுடியின் மகன் சேது ( எஸ்.ஜே சூர்யா) தனது தந்தையைக் கொன்ற துரையை (சரவணன்) எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று காத்திருக்கிறார். இவர்களுக்கு இடையில் எப்படியாவது மோதலை ஏற்படுத்தி அவர்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார் போலீஸாக வரும் பிரகாஷ் ராஜ். 
இந்த சூழ்நிலையில்
இரண்டாவது தம்பியான முத்துவேல் ராயன்(சந்தீப்கிஷன்) குடித்து விட்டு, அடுத்தடுத்து பிரச்சினைகளை இழுத்து வருகிறான். 
அப்படி வரும் ஒரு பிரச்சினையில், ஏரியாவில் முக்கிய புள்ளியான துரையின்(சரவணன்) மகன் ராயன் தம்பி சந்தீப்பால் கொல்லப்படுகிறான். அதற்கு பழி தீர்க்க, துரை கும்பல் முத்துவை கொலை செய்வதற்கு திட்டமிட, தன் தம்பியை காப்பாற்ற முந்திக்கொள்ளும் ராயன், தன் தம்பிகளோடு சேர்ந்து, துரையையும், துரை கும்பலையும் ஒட்டு மொத்தமாக கொல்கிறான். துரையை கொன்றவர்கள் யார் என்று சேதுவான SJ சூர்யாவும் போலிஸ் அதிகாரியான பிரகாஷ்ராஜ்ஜும் தேடுகின்றனர். ராயன் துரையை கொன்றதால் ராயனை எங்கு கொண்டு நிறுத்தியது?.. இறுதியில் ராயன் நிலமை என்ன? இதற்கிடையில், பெரும் திட்டத்துடன் களமிறங்கும் போலீஸ் அதிகாரியின் சூழ்ச்சி நிறைவேறியதா? இந்த களேபரத்திற்கு நடுவே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் ராயன் தங்கை(துஷ்யரா விஜயன்) கல்யாணம் என்ன ஆனது ?துரையை கொலை செய்தது ராயன்தான் என தெரிந்த SJ சூர்யா ராயனை என்ன செய்தார்? என்ற கேள்விகளுக்கான பதில்களே ராயன்
படத்தின் மீதிக் கதை!
 
கடந்த 2017ம் ஆண்டு வெளியான ப. பாண்டி படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் தனுஷ். அதன் பிறகு 7 ஆண்டுகள் கழித்து இயக்கியிருக்கும் படம் ராயன் படம்.
 
இயக்குநராகவும், நடிகராகவும் மிரட்டியிருக்கிறார் தனுஷ். தனுஷ் தம்பிகளாக சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். தங்கையாக துஷ்யரா விஜயன் சிறப்பான நடிப்பை கொடுத்து கைதட்டல் பெறுகிறார். போலிஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ் சிற்ப்பாக நடித்துள்ளார். செல்வராகவன் கேரக்டர் அருமை. அதை சிறப்பாக செய்துள்ளார். S J சூர்யா வில்லனாக நன்றாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் நடிப்பு அருமை. அபர்ணா முரளி நடிப்பு சிறப்பாக இருந்தது. மற்றும் இதில் நடித்த அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்கள். ஏ  ஆர் ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஓம் பிரகாஷின் லைட்டிங்கும், காட்சிகளுக்கு காட்சி அவர் அமைத்திருக்கும் கலர்டோனும், படத்திற்கு அழகு. சிறப்பான ஒளிப்பதிவு. பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகள் அருமை.
 
வழக்கமான கதை தான் என்றாலும் அதை தனுஷ் படமாக்கிய விதம் சிறப்பாக இருக்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
 
தனது 50 ஆவது படத்தை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக சுவாராஸ்யமாக எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்த தனுஷிற்கு பாராட்டுக்கள்.