இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல்
*இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல் இலக்கிய விருது 2026*
‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும். தமிழ் இலக்கியத்தின் திசைவழிப்போக்கை மாற்றியதில் தலித் இலக்கியத்திற்கு முக்கியப் பங்குண்டு. அதில் பெரும் பங்காற்றிய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரைக் கௌரவிப்பதும், அவர்களது படைப்புகளை ஆய்வுநோக்கில் நினைவுகூர்வதும் ‘வேர்ச்சொல் இலக்கிய விருதின்’ நோக்கமாகும். அதன் அடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டுக்கான ‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ அறிஞர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு எழுத்தாளர், கலை விமர்சகர் இந்திரன் அவர்களுக்கும், 2024ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர் பாமா அவர்களுக்கும், 2025ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் ப.சிவகாமி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
...
