ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TAMILNADU
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்க யோகிபாபு நடிக்கிறார்!!
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்க யோகிபாபு நடிக்கிறார்!!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார், லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான “ஒரு கிடாயின் கருணை மனு” மற்றும் “சத்திய சோதனை” படங்கள் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பு, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. RB Talkies சார்பில் S.R. ரமேஷ் பாபு மற்றும் Box office studio...