ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, THEATER, THETERS, TRAILOR LAUNCH
பைரி – தமிழ் திரைப்பட விமர்சனம்
பைரி - தமிழ் திரைப்பட விமர்சனம்
ஒரு சில அறிமுக இயக்குனர்கள் நடப்பு வாழ்வியலை சொல்லும் சில படங்களை தந்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட வரிசையில் அண்மையில் வெளி வந்திருக்கும் படம் தான் பைரி. பைரி என்றால் கழுகு என்று பொருள். நாகர்கோவில் பகுதியில் புறாவை வேட்டையாடும் கழுகின் ஒரு பிரிவை தான் பைரி என்று அழைக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி நாகர்கோவிலில் நடைபெறும் புறா பந்தயத்தை மையப்படுத்தி இந்த பைரி படத்தின் கதையை உருவாக்கி உள்ளார்.
நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் இளைஞன் லிங்கம் படித்து விட்டு, புறாவின் மீது உள்ள காதலால் வேலைக்கு போகாமல், புறா வளர்ப்பில் ஈடுபடுகிறான் . அதே பகுதியில் உள்ள உள்ள பெரிய ரவுடி சுயம்புவும் புறா வளர்ப்பில் ஈடுபடுகிறான் . கதாநாயகன் மற்றும் வில்லனின் கனவு மட்டுமில்லாமல், அந்தப் பகுதியில் இருக்கும் பெரும்பாலான இளைஞர்களி...