கல்வியை தடையின்றி கற்க தேவையான உதவிகளை செய்வதற்காக தனது பிறந்த நாளன்று தனது தாயார் பெயரில் வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா
கல்வியை தடையின்றி கற்க தேவையான உதவிகளை செய்வதற்காக தனது பிறந்த நாளன்று தனது தாயார் பெயரில் வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா
அனைவருக்கும் அன்பு வணக்கம். உங்களின் வாழ்த்துகளுடன் எனது பிறந்தநாளான இன்று கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்குவது குறித்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை எனும் பெயரில் மறைந்த எனது தாயார் நினைவாக இந்த தொண்டு அமைப்பை நான் தொடங்கியுள்ளேன். தகுதியுள்ள ஏழை குழந்தைகள் அவர்கள் விரும்பும் கல்வியை தடையின்றி கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை உருவாக்கி உள்ளோம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்த போதும் மற்றும் தனிப்பட்ட முறையில் என்னை அணுகியவர்களுக்கும் எனக்கு தெரிந்த கல்வி நிறுவனங்கள் மூலமாக பல குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன்...