விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் இணையும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் - இயக்குநர் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, சீமான், கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் ...
