EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, PRESS MEET, TAMIL MOVIES, TRAILOR LAUNCH
விஜய் குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!
விஜய் குமார் நடிக்கும் 'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!
ரீல் குட் ஃபிலிம்ஸின் 'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தீரா..' எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
'சேத்துமான்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக...