டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ‘சட்னி – சாம்பார்’ சீரிஸை வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !!
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், 'சட்னி - சாம்பார்' சீரிஸை வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின், அசத்தலான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் யோகி பாபுவின் முதல் வெப் சீரிஸாக உருவாகியுள்ள இந்த சீரிஸ், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது.
'சட்னி - சாம்பார்' டிரெய்லர், இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான முத்திரைகளுடன், அசத்தலான காமெடி, செண்டிமெண்ட் என ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது.
இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள...
