Friday, August 14

கோவையில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு

*கோவையில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு முக்கிய காரணமான போதை அரக்கன் குற்றவாளி அரவிந்தை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.*

போதையில்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு பயணித்து வருவதற்கு ஏதுவாக போதைப்பொருட்கள் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கேஷ்பே என்ற போலி கிரிப்டோகரன்சி மூலம் இந்தியா முழுவதும் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்த முக்கியக் குற்றவாளியான அரவிந்தை பல மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தி கடந்தாண்டு கைது செய்தது புதுச்சேரி காவல்துறை.மேலும், அவர் தொடர்ந்து கிரிப்டோகரன்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், பல அப்பாவி நடுத்தர வர்க்க குடும்பங்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

தற்போது இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள அரவிந்த் கோவையிலும் சென்னையிலும் சுதந்திரமாக சுற்றி வருகிறான். கோவை நைட் கிளப்புகள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பப்களில் வலம் வரும் இவர், மெத்தபெட்டமைன் போன்ற விலை உயர்ந்த போதைப்பொருட்களை எளிதாக பயன்படுத்துவதோடு, அந்த போதை தரும் மயக்கத்தில் அங்குள்ள இளம் பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவதாகவும், ஆபாசப் படமெடுத்து மிரட்டல் விடுப்பதாகவும், பணக்கார வீட்டுப் பெண்களை குறி வைத்து அவர்களை போதைப்பொருட்களுக்கு அடிமையாக்குவதாகவும், அவர்களை பிளாக்மெயில் செய்து பணம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

சிங்கப்பெண்களைக் கொண்ட சிறப்புப் படையை அமைத்துள்ள தவெக அரசின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதியேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, மெத்தபெட்டமைன் போன்ற மிகவும் விலை உயர்ந்த, கிடைக்க அரிதான போதைப்பொருளை பயன்படுத்தும் இதுபோன்ற நபரை சுதந்திரமாக வெளியே சுற்ற அனுமதிப்பது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பார், பப் போன்ற இடங்களில் அரவிந்த் குமார் வெளிப்படையாக போதைப்பொருள் பயன்படுத்துவதாக கூறப்படும் நிலையில், அவரை இவ்வளவு காலம் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு வழக்கில் எப்படி கைது செய்யாமல் உள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அவருக்கு போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உடனடியாக கண்டறியப்படும் என்றும் கூறப்படுகிறது. அவர் பல தொழிலதிபர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும். அவன் போதை பொருட்கள் விற்கும் பெண்களின் GPay கணக்குகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

யாராவது புகார் அளித்தால், தனக்கு ஆளும் கட்சி மற்றும் உள்ளூர் முக்கிய நபர்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி, அவர் கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கோவையில் பல்வேறு இடங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தை ஒரு தொழில்போல் நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. கோவையில் ஆளும் கட்சியின் அரசியல் ஆதரவு தனக்கு இருப்பதாக அவர் கூறி வருவதால், இதுகுறித்த தகவல்கள் இதுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

அவரது அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் அவரது குடும்பத்தினருக்கு நன்கு தெரியும் எனவும் கூறப்படுகிறது. அரவிந்துக்கு சுதா என்ற மனைவியும், கிரித்விக் என்ற மகனும் உள்ளனர். மற்ற குடும்பங்களை சீரழித்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், இதுபோன்ற செயல்களை அவர் தனது சொந்த குடும்பத்திற்கும் செய்வாரா? என்ற கேள்வியும் எழுகிறது.

அவரது நடவடிக்கைகளால் மனவேதனை அடைந்துள்ள அவரது மனைவியே அவரிடமிருந்து விவாகரத்து கோரி வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படி விலையுயர்ந்த போதைப்பொருட்கள் மற்றும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்தை கைது செய்து விசாரித்தால், கோவை மற்றும் சென்னைக்குள் இந்த போதைப்பொருட்கள் எப்படி வந்தது? கிரிக்கெட் சூதாட்டத்தின் பின்னணி என்ன? கிரிப்டோகரன்சி மூலம் மக்களை ஏமாற்றி பெற்ற பணம் அனைத்தையும் அவர் எங்கே பதுக்கி வைத்துள்ளார்? யாரெல்லாம் இதில் தொடர்பில் இருக்கிறார்கள்? முக்கியப் புள்ளிகள் யாருக்காவது இதனை விற்பனை செய்கிறாரா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் கிடைக்குமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.பெண்கள் அமைப்பு சார்பில் அரவிந்துக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறோம்.

*Title*

1. பணக்கார பெண்களே குறி… போதைப்பொருளுக்கு அடிமையாக்கி அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டல்… கண்டுகொள்ளுமா தவெக அரசு?

2. கிரிக்கெட் சூதாட்டம், போதைப்பொருள் புழக்கம்… சென்னை, கோவையை அதிர வைக்கும் அரவிந்த் குமார்… பகீர் பின்னணி…!

3. கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?

4. கிரிப்டோ டு மெத்தபெட்டமைன்… கோவை, சென்னையில் சுதந்திரமாக சுற்றும் போதைப்பொருள் மன்னன்… பாயுமா நடவடிக்கை?

5. யார் இந்த அரவிந்த்? கோவையை அதிரவைக்கும் குற்றச்சாட்டுகள்!

6. போதைப்பொருள்… கிரிக்கெட் சூதாட்டம்… கிரிப்டோ மோசடி! … கோவை நபர் மீது குவியும் புகார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *