Wednesday, July 1

அப்பாவை இழந்த பின் செய்வதறியாது
திகைத்து நிற்கும் நான், முறையாக ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி எழுதுகிறேனே தவிர, மனதின் அடிதளத்தில் எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து உயர்ந்த உள்ளங்களுக்கும் ஆத்மார்த்தமாய் நன்றி சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். குறிப்பாக தி மு க தலைவர் திரு ஸ்டாலின் ஐயா @mkstalin மீது எங்கள் குடும்பத்திற்கு உள்ள மரியாதை உள்ளத்தின் உட்பகுதியிலும் உயர்வாய் உள்ளது.
அப்பாவுக்கு (50-வது ) நடந்த தங்க விழா ஆண்டில் தன்னுடைய தங்க மனதோடு வாழ்த்தியவர் முன்னாள் முதல்வரும் என்னாளும் எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமான திருமிகு ஸ்டாலின் ஐயா அவர்கள்.
அப்பாவின் மறைவிற்காக என் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வந்த சகோதரர் @Udhaystalin அவர்களுக்கும் , அவர்களுடன் உடன் வந்து
ஆறுதல் உரைத்த முக்கிய அமைச்சர்கள் மற்றும் அனைவருக்கும எங்கள் உளங்கனிந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன் 🙏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *