மார்கழியில் மக்களிசை டிசம்பர் 26ல் சென்னையில்
மார்கழியில் மக்களிசை டிசம்பர் 26ல் சென்னையில் கோலாகலமாக துவங்குகிறது.
இயக்குனர் பா.இரஞ்சித் தின்
நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுப்பில் துவங்கப்பட்ட பிரமாண்டமான இசை நிகழ்ச்சியான 'மார்கழியில் மக்களிசை' ஆறாவது ஆண்டாக இம்முறை வரும் டிசம்பர் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடக்கவிருக்கிறது.
‘மார்கழியில் மக்களிசை’ தமிழ்நாட்டில் இதுவரை நான்கு மாவட்டங்கள், மூன்று மாநிலங்கள் என 12 அரங்குகள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் அரங்கேறியிருக்கிறது.
நாட்டுப்புற இசை, கானா, ஒப்பாரி, பழங்குடி இசை, ராப், ஹிப் ஹாப் என ஆறு இசை வகைமையின் கீழ் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். மூவாயிரத்திற்கு அதிகமான தனியிசைக் கலைஞர்கள் இசைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 35 இசைக்குழுக்களும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 8 இசைக்குழுக்களையும் சேர்த்து இதுவரை 43 ...









