தீபாவளி பண்டிகை ரிலீஸாக நேரடியாக டென்ட் கொட்டாய்
*தீபாவளி பண்டிகை ரிலீஸாக நேரடியாக டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாகிய ‘டியர் ஜீவா’*
*விஜய் டிவி புகழ் டிஎஸ்கே கதாநாயகனாக நடித்திருக்கும் ‘டியர் ஜீவா’ ; டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் ரிலீஸ்*
*அருண்ராஜா காமராஜின் சீடர் இயக்கியுள்ள ‘டியர் ஜீவா’ ; டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியீடு*
தி காம்ரேட் பிலிம்ஸ் சார்பில் J சகாய சதீஷ் மற்றும் சையது ஒமர் முக்தார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டியர் ஜீவா’. பிரகாஷ் வி பாஸ்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
லப்பர் பந்து, பாம் என சமீபத்தில் வெளியான வெற்றிப் படங்களில் கவனம் ஈர்த்த நடிகர் விஜய் டிவி புகழ் டிஎஸ்கே (TSK) இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக தீப்ஷிகா நடிக்க, முக்கிய வேடங்களில் மனிஷா ஸ்ரீ, கலக்கப்போவது யாரு யோகி, லொள்ளு சபா உதய், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரபல இசையமைப்...









