Wednesday, October 14

TAMIL

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு
FLASHNEWS, ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு

*விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, ZEE5 தமிழ் தனது அடுத்த பெரிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக 'நூறு சாமி'யை அறிவித்துள்ளது* *'பரிமளா & கோ'வின் அபார வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆகஸ்டில் குடும்பங்கள் ரசிக்க இன்னொரு திரைப்படத்தை கொண்டு வருகிறது ZEE5 தமிழ்* சென்னை, ஜூலை 24, 2026: விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, இதயத்தைத் தொடும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமான 'நூறு சாமி' இந்த ஆகஸ்டில் ZEE5 தளத்தில் OTT-யில் பிரீமியராக வெளியாகவுள்ளதாக ZEE5 தமிழ் அறிவித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு ZEE5 தமிழுக்கு மிகவும் உற்சாகமான தருணத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் OTT-யில் வெளியான 'பரிமளா & கோ' குடும்ப பார்வையாளர்களின் விருப்பமான திரைப்படமாக உருவெடுத்துள்ளது. ஜெயராம் மற்றும் ஊர்வசி நடித்த இந்த மிகவும் எதிர்பார்க்கப்ப...
ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்*
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்*

*ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்* ஐ&ஐ மூவிஸ் சார்பில் வை. வைரபிரகாஷ் தயாரித்துள்ள படம் ஃபிளாக். இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ் பி பொன் சங்கர். படத்தொகுப்பு வரதராஜன் , இசை ராஜா ரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியம்.. இப்படத்தில் கொட்டுக்காலி, இட்லி கடை போன்ற படங்களில் நடித்த தீஹான் மற்றும் தூம், க்ரிஷ், சர்தார் போன்ற படங்களில் நடித்த பாலிவுட்டை சேர்ந்த மிக்கி மக்கி ஜா & அபினவ் கோசாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இவர்களுடன் போஜ்புரியை சார்ந்த அனந்த் பெங்காளியைச் சேர்ந்த பப்புஷா மற்றும் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் ... இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில் தமிழ்நாடு, கேரளா,ஆந்திரா, கர்நாடகா, மும்பை, குஜராத், ராஜஸ்...
23.07.2026 அன்று காலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

23.07.2026 அன்று காலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள்

*ஊடகங்களுக்கான செய்தி:* *23.07.2026 அன்று காலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.* இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை வாசிக்கச்செய்து, தேர்வுச் சான்றிதழை வழங்கியவர்.. திரையுலகில் கணக்கிலடங்கா எழுத்துச் சாதனைகளைச் செய்த நம் மூத்த உறுப்பினரும், எதிரணியில் தலைவர் வேட்பாளராக தேர்தலைச் சந்தித்தவருமான மதிப்பிற்குரிய திரு.வி.சி.குகநாதன் அவர்கள். தேர்தல் அதிகாரி திரு. உமாசங்கர் பாபு அவர்களின் முன்னிலையில்.. தலைவராக திரு.சேரன், பொதுச் செயலாளராக திரு.பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக திரு.ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் பதவியேற்றார்கள். தலைவர் சேரன் அனைவரையும் வரவேற்று சங்கத்தின் நலனுக்காக இணைந்து சிறப்புடன் செயல்படுவோம் என்ற...
காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன்

*‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி* மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர். ‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித உணர்வுகள், ஆன்மிகத் தேடல் மற்றும் வித்தியாசமான...
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் சொல்ல
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் சொல்ல

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் சொல்ல வரும் ஆன்மீக திரைப்படம் “பிரஜாபதி” – டிரெய்லர் வெளியீட்டு விழா !! “இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை கொண்டு செல்லும் முயற்சி “பிரஜாபதி” - தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் பாராட்டு !! இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் திரைப்படமாகப் பதிவு செய்யும் “பிரஜாபதி” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டதுடன், திரைப்படத்தின் நோக்கம், உருவாக்கப் பயணம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் டிரெய்லரை பார்த்து படக்குழுவிற்கு வ...
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில்

*நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ படத்தின் 'கானா விளக்கு மயிலே...' மற்றும் 'அடி தேனி சந்தையில்...' ஆகிய இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அடுத்து, இவர் இயக்குநர் சீனு ராமசாமியுடன் இணைந்திருக்கும் 'இடிமுழக்கம்' திரைப்படம், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். படத்தின் எனர்ஜிடிக்கான பாடலான ‘க...
ஒன்று குழந்தைகள் பாதுகாப்பு சேவை பற்றிய கேள்வி
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

ஒன்று குழந்தைகள் பாதுகாப்பு சேவை பற்றிய கேள்வி

எம் பி எல் கே சுதீஷ் மாநிலங்களவையில் இரண்டு முக்கியக் கேள்விகளை மத்திய அரசிடம் முன் வைத்தார்.. ஒன்று குழந்தைகள் பாதுகாப்பு சேவை பற்றிய கேள்வி மற்றொன்று தேசிய நெடுஞ்சாலைகளில் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் போக்குவரத்து மேலாண்மை மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என கேள்வி எழுப்பினார் அதற்கு மத்திய அமைச்சர்கள் பின்வருமாறு பதிலை கூறினார்கள்.. மாநிலங்களவையில் எம்.பி. எல்.கே. சுதீஷ், மிஷன் வாத்சல்யா திட்டத்தின் செயல்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள், பதிவு செய்யப்படாத குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள், மாநிலங்களுக்கு இடையேயான குழந்தைகள் மீளிணைப்பு நடைமுறைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார...
ஜீவா  லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜீவா  லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன்

*ஜீவா  லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!* ‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட தரமான வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா நடிப்பில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ படப்பிடிப்பை இன்று  பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது. மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற பூஜையில் படக்குழுவினரோடு  திரை பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக இணைந்துள்ளார். இந்தப் புதிய கூட்டணி ரசிகர்களிடையே  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜீவா மீண்டும் மதுரை மண்ணின் மண்வாசனையோடு, வலுவான ...
பாடலாசிரியர் டாக்டர் கிருதயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டு
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பாடலாசிரியர் டாக்டர் கிருதயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டு

பாடலாசிரியர் டாக்டர் கிருதயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.இயக்குநர் விவேக பாரதி அவர்கள் இயக்கிய"பாசக்காரப் பய" என்ற படத்தில் அவர் பாடல் எழுதும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தேன். சாயம் போட்ட உதட்டு மேல சாயப் பாக்குற... சரிசமத்த இதுல மட்டும் கெஞ்சி கேட்குற...   ஒரு பெண் பாடுவதைப் போல் வரும் இந்த வரிகளை என் மெட்டுக்கு எழுதி,"சார் இது கொஞ்சம் வெரசமா இருக்கும்,பரவா இல்லயா...?"என்றார்.காதலுக்கு சமத்துவம் இல்லாத நம்ம இந்தியாவுல இது தான் சரியான வரிகள்... தத்துவப் பாடல்களில் தான் சமத்துவத்தை சொல்லலாம் என்றில்லாமல்,விரசப் பாட்டிலும் சமத்துவ பாகுபாட்டை சொல்லியிருக்கீங்க,அந்த வகையில் நீங்க நல்ல கவிஞர் தான் என்றேன்...பூரித்துப் போனார்... "ஜிஞ்சனக்கன ஜனச்சனக்கன கிழிஞ்சது வேட்டி... பஞ்சு மெத்தையில் உனக்கும் எனக்கும் சடுகுடு போட்டி"... அந்தோணி தாசன்,வனிதா...
ஏழு மொழிகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய
INDIA, ONLINE MOVIES, PREVIEW, TAMIL, TAMIL MOVIES

ஏழு மொழிகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய

ஏழு மொழிகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் பட்டியலை வெளியிட்ட ZEE5 இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் ஆகிய ஏழு மொழிகளில், இந்தியாவின் துணிச்சலான, கலாச்சார வேர்களை பிரதிபலிக்கும், மனதை கவரும் கதைகளை ஒரே தளத்தில் வழங்கும் ZEE5 பொழுதுபோக்கு உலகம் என்பது டிரெண்டிங்கை பின்பற்றுவதால் வளர்வதில்லை; புதிய டிரெண்டிங்கை உருவாக்குவதன் மூலமே வளர்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இதுவரை இல்லாத அளவிலான தனது மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் (Content Slate) பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் என ஏழு மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், AI தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட கதைகள், அனிமேஷன் மற்றும்...