Thursday, November 19

TAMIL

*4K Dolby Atmos ஸில் 30 வருடத் துக்கு பின் பாஷா
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*4K Dolby Atmos ஸில் 30 வருடத் துக்கு பின் பாஷா

*4K Dolby Atmos ஸில் 30 வருடத் துக்கு பின் பாஷா உங்கள் அபி மான அரங்குகளில்* அருளாளர் ஐயா ஆர்.எம். வீரப்பன் உருவாக்கிய சத்யா மூவீஸ்-ன் மரபை அதே கலை நுணுக்கத்துடனும், வீரியத்துடனும் முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கடந்த 60 ஆண்டுகாலமாக திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்ற சத்யா மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புகழை கொண்டாடும் வேளையில், ரசிகர்கள் நெஞ்சம் கவர்ந்த எங்களின் ஆகச்சிறந்த படைப்புகளான இதயக்கனி மற்றும் பாட்ஷா ஆகிய வெற்றித் திரைப்படங்களை மீண்டும் வெளியிடுகிறோம் - அவை இப்போது காட்சி ரீதியாக மேம்படுத்தப்பட்ட 4K மற்றும் Dolby Atmos ஒலியில், அதிநவீன தொழில்நுட்பத்தால் மீட்டு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. *மக்களால் கொண்டாடப்பட்ட பாட்ஷா திரைப்படம் ஜூலை 18 2025 அன்று  அற்புதமான புதிய வடிவத்தில் திரையரங்குகளுக்குத் திரும்ப வர இருக்கிறது. இன்றைய பா...
வருகின்ற ஜூலை 23 சூர்யா அவர்களின் 50
ACTOR GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வருகின்ற ஜூலை 23 சூர்யா அவர்களின் 50

வருகின்ற ஜூலை 23 சூர்யா அவர்களின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக நேற்று மாலை 2 லட்சம் மதிப்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தையல் மெஷின், 150 நபர்களுக்கு புடவை 150 நபர்களுக்கு வேட்டி 150 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் 150 தண்ணீர் குடம் 10 முதியோர்களுக்கு ஊக்கத்தொகை இதில் தயாரிப்பாளர் திரு. ராஜசேகர் பாண்டியன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்....
பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்த ம்
AWARD, TAMIL, TAMILNADU

பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்த ம்

*பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்த ம் அவர்களுக்கு கீதம் பல்கலைக் கழகம் இலக்கியத்தில் மதிப்புக்கு ரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி யது* பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவையில் அளித்த அபூர்வமான பங்களிப்புகளுக்காக, “பேட்மேன்” என அனைவரும் அன்புடன் அழைக்கும் பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. மாநிலங்களின் புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரத்தை மாற்றியமைத்த அவர், உலகளவில் பெண்களின் நலனுக்காக போராடும் இயக்கங்களுக்கு தூண்டுதல் அளித்துள்ளார். உலகிலேயே மிகவும் தாக்கம் செலுத்தும் 100 பேரில் ஒருவராக, Time பத்திரிகை அவரை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. அவருடைய வாழ்க்கை கதை அடிப்படையாக கொண்டு, தேசிய விருதுபெற்ற ஹிந்தி திரைப்படமான “Padman...
சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’
AUDIO/VIDEO ALBUM, PREVIEW, TAMIL, TAMILNADU

சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’

*சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ இசை ஆல்பம் வெளியீடு* இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், வாஹீசன் ராசய்யா ராப் எழுத்தில், 'ச்சீ ப்பா தூ...' சரிகமா ஒரிஜினல்ஸ் இசை ஆல்பம் வெளியானது !! சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் திரை இசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டன்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த வெளியீடாக சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது. ...
திரு.கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின்
AUDIO/VIDEO ALBUM, TAMIL, TAMILNADU

திரு.கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின்

*திரு.கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' இசை ஆல்பம் !!* இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...' வீடியோ இசை ஆல்பம் பாடலை திரு. கமல்ஹாசன் பாராட்டியதுடன் அக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இன்றைய இளம் தலைமுறையினரிடையே இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்கள் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. சமீபத்தில் தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார் இசையில், இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் எழுத்தில் வெளியான, 'ச்சீ ப்பா தூ...' பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்பாடலின் வீடியோ ஆல்பத்தை பார்த்த திரு. கமல்ஹாசன் பாடலினால் கவரப்பட்டு, அக்குழுவினரை ...
நடிகர் வெற்றி நடிக்கும் ‘செ ன்னை ஃபைல்ஸ் –
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் வெற்றி நடிக்கும் ‘செ ன்னை ஃபைல்ஸ் –

நடிகர் வெற்றி நடிக்கும் 'செ ன்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம் 'படத்தின் இசை வெளியீடு* *நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.* அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வர...
உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியிக்கும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியிக்கும்

உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியிக்கும் " போகி " ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகும் " போகி " V i குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு "போகி "என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் நபி நந்தி, சரத், லப்பர் பந்து படத்தில் சிறப்பான தோற்றத்தில் நடித்த சுவாசிகா, பூனம் கவூர், வேலாராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம். எஸ்.பாஸ்கர், முரு ஸ்டார் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு - ராஜா C சேகர் இசை - மரியா மனோகர் பாடல்கள் - சினேகன் வசனம் - S.T. சுரேஷ்குமார் எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ் கலை இயக்கம் - A. பழனிவேல் ஸ்டண்ட் - அன்பறிவ், மிராக்கிள் மைக்கேல், நடனம் - அசோக் ராஜா மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ் தயாரிப்பு - V i குளோபல் நெட்வொர்க்ஸ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் - S. விஜயசேகரன். படம் ப...
*நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூ ஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூ ஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

*நடிகர் உதயா நடிக்கும் 'அக்யூ ஸ்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* நடிகர்கள் உதயா - அஜ்மல் - யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் - சச்சின் சினிமாஸ்- ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா - 'தயா' என். பன்னீர்செல்வம் - எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் முதல் தேதியன்று உலகம் முழுவது...
தென்னிந்திய மீடியா விருதுகள் !!
AWARD, PRESS MEET, TAMIL, TAMILNADU

தென்னிந்திய மீடியா விருதுகள் !!

தென்னிந்திய மீடியா விருதுகள் !! தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது. AR Group இதனை வழங்குகிறது. இந்த விருது விழாவில் தென்னிந்தியா முழுவதும் செய்தி ஊடகங்களில் பணியாற்றும் திறமையான ஊடக நண்பர்களுக்கான நியூ இந்தியன் டைம்ஸ் மீடியா விருதுகள், சிறந்த தொகுப்பாளர் | சிறந்த நிருபர் | சிறந்த வீடியோ எடிட்டர் | சிறந்த வீடியோ கேமராமேன் | சிறந்த நகல் எடிட்டர் | சிறந்த குரல் ஓவர் கலைஞர் | சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளது. TNIT குழுமத்தின் CEO ரகுபட் இந்த விருது விழாவை நடத்துகிறார். இந்த விழாவினை பற்றிய அறிமுகத்தை மீடியா நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக TNIT சார்பில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தன...
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும்

*'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* *சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.* இந்நிலையில் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன், தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் ரோஹன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் பேசுகையில், ''மூன்றாவது தலைமுறையாக திரைப்படங்களை தயாரித்து தயாரிப்ப...