48 மணி நேரத்தில் முழு படமும் முடித்து திரையிடப்பட இருக்கும்
48 மணி நேரத்தில் முழு படமும் முடித்து திரையிடப்பட இருக்கும் உலக சாதனை திரைப்படம் ‘டெவிலன்’!
48 மணி நேரத்தில் ஒரு படத்தை முடித்து வெளியிடுவது என்ற மிகப்பெரிய சவாலை வெற்றி கரமாக செய்து முடிப்போம்! - ‘டெவிலன்’ இயக்குநர் பிக்கய அருண் நம்பிக்கை.
மிகப்பெரிய ரிஸ்க்காக இருந் தாலும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதில் இறங்கியிருக்கிறேன் - ‘டெவிலன்’ மூலம் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள சீகர் ராஜ்குமார்
ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்து பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் தயாரிப்பாளரும், நடிகருமான ராஜ்குமார் மற்றும் இயக்குநர் பிக்கய் அருண் ஈடுபட்டுள்ளனர்.
’டெவ...









