AUDIO/VIDEO ALBUM, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, MOVIE REVIEW, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES
லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்துவிட்டு லைக்கா சுபாஸ்கரன் பாராட்டு
லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்துவிட்டு லைக்கா சுபாஸ்கரன் பாராட்டு
அமீர் தன்னை விமர்சித்த நிலையிலும் 'உயிர் தமிழுக்கு' படம் பார்த்து பாராட்டிய லைக்கா சுபாஸ்கரன் இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்து நேற்று (மே-10 ) வெளியாகியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. ஆன்டி இண்டியன் படத்தை தயாரித்த மூன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.
அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் இமான் அண்ணாச்சி, சரவண சக்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
அரசியல் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதால் படம் குறித்த...

