டாடா சாம்பன் ‘பியார் பாரா’ பிரச்சாரத்தை தொடங்கியது!
இயற்கை நமக்கு என்ன அளிக்க வேண்டுமென விரும்புகிறதோ அதே நல்ல நோக்கத்துடன், அதன் நன்மைகளை, நமக்கு நம்முடைய உணவில் டாடா சம்பன் எப்படி அளிக்கிறது என்பதை இப்பிரச்சாரம் அழகுடன் வெளிப்படுத்துகிறது..
புதிய பிரச்சாரப் படத்தை கண்டுகளிக்க அதன் இணைப்பை இங்கே தொடுங்கள் https://youtu.be/c6ckxntaUcU
சென்னை, நவம்பர் 15, 2024: டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் [Tata Consumer Products Limited (TCPL)] -ன் பிராண்டான டாடா சம்பன், பாலிஷ் செய்யப்படாத பருப்பு வகைகள், தங்களுக்கே உரிய இயற்கை எண்ணெய்கள் கொண்ட மசாலா பொருட்கள், அதிக நார்ச்சத்து கொண்ட குர்ஜரி வகை போஹா, பிரீமியம் தரத்திலான உலர் பழங்கள் [unpolished pulses, spices with native natural oils, high fibre Gurjari variety Poha, premium quality dry fruits] உள்ளிட்ட இன்னும் பல தயாரிப்புகளை அவற்றின் இயற்கை குணங்களுடன் வழங்குகிறது. டாடா சம்பன் தயாரிப்புகள் வழங்கும் இந்த இயற்கை குணம் மாறாத தயாரிப்புகளின் பிரத்தியேக குணாதிசயங்களை மிகவும் தத்ரூபமாக வெளிப்படுத்தும் வகையில், ’’பியார் பாரா’ [Pyar Bhara’] என்ற பிராண்ட் பிரச்சாரத்தை டாடா சம்பன் வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் இயற்கையின் அன்பு நிறைந்த உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வாடிக்கையாளர்களை டாடா சம்பன் ஊக்குவிக்கிறது.
இந்த பிரச்சார விளம்பரம், பிரபல சமையல் கலைஞர்களான சஞ்சீவ் கபூர் மற்றும் ரன்வீர் பிரார் ஆகியோருக்கு இடையேயான நட்புடன் கூடிய நகைச்சுவையை அழகுடன் காட்டுகிறது, அதே நேரத்தில், டாடா சம்பன் பாலிஷ் செய்யப்படாத பருப்பு எப்படி ஒரு சிறப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கிறது என்பதையும் காட்டுவதோடு, அதில் நிறைந்திருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இயற்கையின் நன்மைகளை அப்படியே கொண்டிருக்கிறது என்பதையும் காட்சிப்படுத்துகிறது. இதன் மூலம் டாடா சம்பன், இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது என்பதையும் அடிக்கோட்டிட்டு காட்டுகிறது.
இயற்கை குணம் மாறாத மற்றும் அவற்றின் நன்மைகளை இழக்காமல் தயாரிக்கப்பட்டிருக்கும் பொருட்களைக் கொண்டு சமைப்பதினால் உண்டாகும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதன் மூலம், ‘பியார் பாரா’ பிரச்சாரமானது, இயற்கை நமக்கும் அளிக்கும் உணவை உட்கொள்ள செய்யும் எண்ணத்தை ஊக்குவிக்கிறது. நாம் உண்ணும் ஒவ்வொரு உணவையும் சுவையுடன் கூடியதாகவும், குடும்பத்திற்கு அவசியமான ஊட்டச்சத்துள்ளதாகவும் ஆக்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்கள் சமையலில் உபயோகிக்கும் உணவுப் பொருட்களிடையே ஒரு ஆழமான உறவை வளர்க்கிறது.
இந்த பிரச்சாரம் பற்றிக் டாடா கன்ஸ்யூமர் ப்ரொடக்ட்ஸ் நிறுவனத்தின் பேக்கேஜ்ட் ஃபுட்ஸ் பிரிவின் தலைவர் தீபிகா பன் [Deepika Bhan, President, Packaged Foods – India, Tata Consumer Products] கூறுகையில், “பாலீஷ் செய்வது என்பது ஒரு இயற்கை குணத்தை மாற்றுமொரு கடுமையான செயல் என்று நாங்கள் நம்புகிறோம். காரணம் பாலீஷ் செய்வதால் பருப்பில் இயற்கையாகவே உள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை நீக்கப்பட்டு விடுகின்றன. இதனால்தான் நாங்கள் நாங்கள் டாடா சம்பனில் பருப்பை பாலீஷ் செய்து மெருகூட்டுவதில்லை. மேலும், பாலீஷ் செய்யப்படாத, இயற்கையின் குணநலன்களும், பலன்களும் நிறைந்திருக்கும் பருப்பை எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். பருப்பு மட்டுமில்லாமல், டாடா சம்பன் உணவுப் பொருட்கள் அனைத்திலும் இதே இயற்கை தரம் இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்’’ என்றார்.
தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட ஒகில்வி இந்தியா நிறுவனத்தின் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி (மேற்கு) அனுராக் அக்னிஹோத்ரி [Anurag Agnihotri, Chief Creative Officer (West) at Ogilvy India], “உணவு பதப்படுத்தப்படாமலும், அதன் இயற்கை குணங்கள் சேதப்படுத்தப்படாமலும் இருக்கும்போது, செயற்கையான அல்லது மெரூகூட்டும் அம்சங்கள் எதுவும் இல்லாதபோது, அதில் என்ன இருக்கிறது? ஒருவேளை, அன்பும், காதலும் அதில் இருக்கலாம். அப்படிதான் டாடா சம்பன் தனது தயாரிப்பைப் பொறுத்தவரையில் பருப்புகள் மற்றும் இயற்கை எண்ணெய்கள் நிறைந்த மசாலப் பொருட்களை பாலிஷ் செய்து மெருகூட்டுவதில்லை. அவற்றின் இயற்கை குணத்தையும், மாறாமல் அப்படியே வைத்திருக்கிறது. டாடா சம்பனின் இந்த பிரத்தியேக குணத்தை நாங்கள் அப்படியே உயிர்ப்போடு வெளிக்காட்ட விரும்பினோம். மற்றும் தூய மசாலாப் பொருட்களில் இயற்கையான இயற்கை எண்ணெய்கள் உள்ளன, இது இயற்கையின் மீது வைத்திருக்கும் அன்பைத் தக்க வைத்துக் கொள்கிறது. இந்த எண்ணத்தைத்தான் நாம் உயிர்ப்பிக்க நினைத்தோம். இந்தியாவின் இரண்டு பிரபலமான சமையற்கலை நிபுணர்களிடமிருந்து இது குறித்து வெளிவரும் போது, வாடிக்கையாளர்களின் மத்தியில் இது அக்கறையுடன் கேட்கப்படும், எளிதில் புரிந்து கொள்ளப்படும் மேலும் அதிகம் விரும்பப்படும் என நம்புகிறோம்’’ என்றார்.
பிரபல சமையற்கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் [brand Chef Sanjeev Kapoor] பிராண்டுடனான தனது நெருங்கிய உறவைப் பற்றி பேசுகையில், “சமையல் ஒரு நேர்மையான கலை. சமைப்பதில் நீங்கள் அக்கறையுடன் மேற்கொள்ளும் முயற்சிகளும், நாம் உணவில் சேர்க்கும் சமையல் பொருட்களும் உங்களது அன்பினால் நிறைந்திருந்தால் மட்டுமே உணவு சுவையுடன் உயிர்பெறும். அதனால் தான் நான் டாடா சம்பனைத் தேர்வு செய்கிறேன். டாடா சம்பனின் தயாரிப்புகள் இயற்கையின் தூய்மையையும், எல்லையில்லாத அன்பையும் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் நீங்கள் டாடா சம்பன் தயாரிப்புகளைக்கொண்டு சமைக்கும் போது, அதை நீங்கள் அதை உணர முடியும். சமைக்கிறீர்கள். இந்திய உணவு மீதான இயற்கை குணம் மாறாத இந்த அன்பைக் கொண்டாடும் பிரச்சாரத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். இயற்கை என்னுடையது. இயற்கை உங்களுடையது.” என்றார்.
சமையற்கலை நிபுணர் ரன்வீர் ப்ரார் [Chef Ranveer Brar] இந்த பிராண்ட் பிரச்சாரத்தைப் பற்றி கூறுகையில், “இயற்கை வழங்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த, சுவை மிகுந்த உணவை, டாடா சம்பன் நமக்கு நினைவூட்டுகிறது. சிறந்த உணவைத் தயாரிப்பதில் இருக்கும் ரகசியம், இயற்கை அதை உருவாக்கும் விதத்தை மதிப்பதில் உள்ளது என்று நான் நம்புகிறேன், மேலும் இந்த உணர்வை அழகாகப் படம்பிடித்திருக்கும் இப்பிரச்சாரத்திற்கு எனது குரலைக் கொடுதிருப்பதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். டாடா சம்பன் இயற்கை தயாரிப்புகளுக்கு நெருக்கமானதாக இருப்பதோடு, நாம் வீட்டில் சமைக்கும் உணவினால் உண்டாகும் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்க செய்கிறது’’’ என்றார்.
டாடா சம்பனின் ‘ப்யார் பாரா’ [Tata Sampann ‘Pyar Bhara’] பிரச்சாரம், வாடிக்கையாளர்கள் தங்களை ஈடுப்படுத்தி கொள்ளும் சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் தளங்களில் விளம்பரப்படுத்தப்படும். மேலும் இதில் டாடா சம்பன் தயாரிப்புகளைக் கொண்டு வாடிக்கையாளர்கள் சமைப்பதில் இருக்கும் தங்களுடைய சமையல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். புதிய பிரச்சாரப்படம் டாடா சம்பனின் சமூக ஊடக பக்கங்களில் இப்போது நேரலையில் பார்வைக்கு உள்ளது, நம் மீதான இயற்கையின் அன்பு நம்முடைய அன்றாட சமையலை எவ்வாறு மாற்றுகிறது என்பதை உணர்ந்து கொள்ள வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கிறது. அது மட்டுமில்லாமல், நம்முடைய தினசரி உணவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் சுவைமிகுந்ததாகவும் மாற்றுகிறது. https://youtu.be/c6ckxntaUcU
About Tata Consumer Products Limited:
Tata Consumer Products Limited is a focused consumer products company uniting the
principal food and beverage interests of the Tata Group under one umbrella. The
Company’s portfolio of products includes tea, coffee, water, RTD, salt, pulses, spices,
ready-to-cook and ready-to-eat offerings, breakfast cereals, snacks and mini meals.
Its key beverage brands include Tata Tea, Tetley, Organic India, Eight O’Clock
Coffee, Tata Coffee Grand, Himalayan Natural Mineral Water, Tata Copper+ and Tata
Gluco+. Its foods portfolio includes brands such as Tata Salt, Tata Sampann, Tata
Soulfull, Ching’s Secret and Smith & Jones. In India, Tata Consumer Products has a
reach of over 263 million households, giving it an unparalleled ability to leverage the
Tata brand in consumer products. The Company has a consolidated annual turnover
of ~Rs. 15,206 Crs with operations in India and International markets.
Last 10-year financials are available on Historical financial data.
For more information on the Company, please visit our website: