*’இசைஞானி’ இளையராஜா இசையில் ‘ அரிசி
*'இசைஞானி' இளையராஜா இசையில் ' அரிசி' படத்திற்காக இணைந்த பாடகர்கள் வேடன் - அறிவு கூட்டணி*
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொது செயலாளரான இரா. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'அரிசி' எனும் திரைப்படத்தில் இடம்பெறும் பாடலுக்காக இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் முன்னணி பாடகர்களான அறிவு மற்றும் வேடன் ஆகியோர் இணைந்திருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரிசி' எனும் திரைப்படத்தில் இரா. முத்தரசன், சமுத்திர கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜான்ஸ் V . ஜெரின் ஒளிப்பதிவு செய்ய, K. S. நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருக்கிறார்.
விவசாயத்தையும், விவசாயிகளையும் மையப்பட...









