எங்கப்பா, தோழர் வீரமணியைப் போலவே கடைசிவரை
எங்கப்பா, தோழர் வீரமணியைப் போலவே கடைசிவரை கம்யூனிஸ்ட்டாக இருந்தவர் எனது அண்ணன் தோழர் அஜய் கோஷ். நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களிடம் பயிற்சி பெற்றவர்.
லேபர் லா பிராக்டிஸ் பண்ணிக்கொண்டிருந்தார். முதலாளிகளின் பணத்துக்காக ஒரு போதும் விலை போகாதவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு ரூபாய் கூட வாங்காமல் வழக்காடி நியாயத்தின் பக்கம் நின்றவர்.
வழக்குக்காக வந்த மக்களிடம் சாப்பிடீங்களா… ஊருக்குப் போக பணம் இருக்கா என்று வழி செலவுக்கு பணம் கொடுத்து அனுப்புவார்.
மதுரை கோர்ட்டில் ஒரு ஆர்க்யூமென்ட், நானும் பார்வையாளராக இருக்கேன். அரசு தரப்பு லாயர், போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் வைக்கப்பட்ட வாதத்தில் அஜய்கோஷ் எவ்வளவு அமைதியாக இருக்கிறார் பார்த்தீங்களா! என்று ஜட்ஜ் பாராட்டும் அளவுக்கு… நேர்மையான வழக்கறிஞர்.
நான் சினிமா சார்ந்த ஆள் என்பதால் ஒரு உதாரணம் சொல்கிறேன். சினிமா ஃபிலிம் பா...









