ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் “கட்டாளன்”
ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் “கட்டாளன்” திரைப்படத்தில், சுனில் மற்றும் கபீர் துஹான் சிங் இணைந்துள்ளனர்!!
“மார்கோ” எனும் ஆக்சன், திரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரீஃப் முகமது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அடுத்ததாக, அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மிக பிரம்மாண்டமான அதிரடி ஆக்சன் படமான “கட்டாளன்” படத்தினை தயாரித்து வருகிறார்.
முதன்மைக் கதாபாத்திரத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் இப்படம், அடர்ந்த வனத்திற்குள், வாழ்க்கைக்கும் விதிக்குமான போராட்டத்தில் சிக்கியுள்ள ஒருவனின் அசாத்தியமான பயணத்தை விவரிக்கிறது. தனது தனித்துவமான நடிப்புக்கு பெயர் பெற்ற, ஆண்டனி வர்கீஸ், “கட்டாளன்” படத்தில், காட்டுக்...









