ASSOCIATION, AWARD, BOOKS / NOVELS, FILM INDURSTRY, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMILNADU, Uncategorized
எழுத்தாளர், பாடலாசிரியர் மௌனன் யாத்ரிகா எழுதி நீலம் பதிப்பகம் வெளியிட்ட ‘எருமை மறம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா
இன்றைய அரசியல் சூழலில் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தவிர்க்க முடியாத தலைவராக இருப்பது பெரும் மகிழ்ச்சி - பா.இரஞ்சித்
"நாம் இணைந்து செயல்படவேண்டிய காலம் இது"
'எருமை மறம்' புத்தக வெளியீட்டு விழாவில் டாக்டர் தொல் திருமாவளவன்.
எழுத்தாளர், பாடலாசிரியர் மௌனன் யாத்ரிகா எழுதி நீலம் பதிப்பகம் வெளியிட்ட 'எருமை மறம்' கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது. நீலம் பதிப்பகத்தின் பொறுப்பாசிரியர் வாசுகி பாஸ்கரின் வரவேற்புரையோடு துவங்கிய இந்நிகழ்வை பேராசிரியர் அருந்தமிழ் யாழினி தொகுத்து வழங்கினார்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நூலை வெளியிட இயக்குநரும் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளருமான பா. இரஞ்சித் பெற்றுக் கொண்டார்.
பொதுச் சமூகத்தில் எருமை மாட்டின் மீது கட்டப்பட்டுள்ள பிம்பத்தை மேற்கோள் க...