ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, AWARD, EVENT GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, THETERS, TRAILOR
நடிகை கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகிறது!
நடிகை கயல் ஆனந்தியின் 'ஒயிட் ரோஸ்' படம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகிறது!
பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர்கள் விஜித், பேபி நக்ஷத்திரா, சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி இருக்கிறது. படம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகும் எனப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
இக்கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் மூலமாக சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இளையாராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள எழுதியுள்ளார். சுத...