டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வாராவாரம் ஆரவாரம் செய்து வரும் உப்பு புளி காரம்!*
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வாராவாரம் ஆரவாரம் செய்து வரும் உப்பு புளி காரம்!*
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்', குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களுடன், அனைத்து தரப்பு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'உப்பு புளி காரம்' வெப் தொடர் ஒரு கணவன் மனைவி, அவர்களின் நான்கு குழந்தைகள் என ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தில் நடக்கும் அட்டகாசம்,அன்பு, காமெடி, சேட்டை, அனைத்தும் சேர்ந்த கலவையாக கவனிக்க வைக்கிறது.
இதுவரையிலான கதையில், வீட்டைக் கட்டிக்காக்கும் அம்மா சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் வனிதா ஒரு தாயின் கனிவும் கவனிப்பும் நிரம்பியபடி அழகான நடிப்பை தந்துள்ளார். அப்பா சுப்பிரமணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பொன்வண்ணனின் நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் பார்ப்பவர...

