இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் ‘டீன்ஸ்’ டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு
இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் 'டீன்ஸ்' டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு
திரையரங்கில் நான்கு காட்சிகளாக இசை வெளியிடப்பட்டு புதிய உலக சாதனை, டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு பாராட்டு தெரிவித்த 'டீன்ஸ்' படக்குழு உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.
டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதை தொடர...








