தளபதி’ விஜய் கல்வி விருது வழங்கும் விழா!
தளபதி' விஜய் கல்வி விருது வழங்கும் விழா!
'தளபதி' விஜய் அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பக்கம் கட்டி போட்டிருக்கும் 'தளபதி' விஜய் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார்.
கட்சியை துவங்கும் முன் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அதன் மூலம் பல நற்பணிகள் செய்து வந்தார். இந்த ஆண்டு கட்சியை துவங்குவதற்கு அடித்தளம் அமைப்பது போல், கடந்த ஆண்டு ஜுன் 17-ஆம் தேதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக சான்றிதழும் ஊக்கத் தொகையும் அளித்து உத்வேகப்படுத்தினார்.
...






