எம்ஆர் பிக்சர்ஸ் ஏ மகேந்திரன் ஆதிகேசவன் வழங்கும், அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில் ராஜ் அய்யப்பா-டெல்னா டேவிஸ் நடிக்கும் ரோம்- காம் திரைப்படம் ‘லவ் இங்க்’!
எம்ஆர் பிக்சர்ஸ் ஏ மகேந்திரன் ஆதிகேசவன் வழங்கும், அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில் ராஜ் அய்யப்பா-டெல்னா டேவிஸ் நடிக்கும் ரோம்- காம் திரைப்படம் ‘லவ் இங்க்’!
எம்ஆர் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் ஏ மகேந்திரன் ஆதிகேசவன் ‘லவ் இங்க்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக பயணத்தைத் தொடங்குகிறார். இது தற்கால உறவுகளைச் சுற்றி வரும் ரோம்-காம் திரைப்படம். இப்போதிருக்கும் தலைமுறை மத்தியில் 'லவ் இங்க்' என்ற சொல் மிகவும் பிரபலம். தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களையோ அல்லது காதல் சின்னத்தையோ ஜோடிகள் டாட்டூ போட்டுக் கொள்வதுதான் ‘லவ் இங்க்’. இதனால், ஜோடிகளுக்கு இடையில் காதல் கூடுகிறது என்று நம்பப்படுகிறது. ஆனால், இதன் இன்னொரு பக்கத்தை சொல்ல வேண்டும் என்றால் Upgraded version of possessiveness. இப்படியான காதலர்களைச் சுற்றிதான் ‘லவ் இங்க்’ படம் நகர்கிறது. இதோடு படத்தில் ஃபன், ஆக்ஷன் மற்றும் எண்டர்டெய...