ரசிகர்களுக்கு விருந்து வைத் துக் கொண்டாடிய,
*ரசிகர்களுக்கு விருந்து வைத் துக் கொண்டாடிய, விஜய் டிவி !!*
*சின்ன மருகள் சீரியல் வெற்றியை, ரசிகர்களுக்கு மொய் விருந்து வைத்து கொண்டாடிய விஜய் டிவி !!*
*சின்ன மருகள் சீரியல் குழுவினர், விஜய் டிவி பிரபலங்கள், மக்களுடன் இணைந்து கொண்டாடிய திருவிழா !!*
தமிழகத்தின் விருப்பமான தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "சின்ன மருமகள்" நெடுந்தொடர், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், மக்களுடன் இணைந்து உரையாடி, அவர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடியுள்ளது விஜய் டிவி.
பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் சின்ன மருமகள் தொடர், பெண்களிடம் பெரும் பார...





