ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU
’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!
’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் 'தி ரூட்' கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.
பேஷன் ஸ்டுடியோஸ் இணைத் தயாரிப்பாளர் கமல் நயன் பேசியதாவது, “எங்கள் நாயகனை இந்த ஐம்பதாவது படம் மூலம் அரியணை ஏற்றி மகாராஜாவாக அமர வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி”.
எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன், “எங்களுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நல்ல உறவு உள்ளது. கொரோனா சமயத்தில் பல படங்களை எடுத்து வைத்து நாங்கள் காத்திருந்தோம். கொரோனாவுக்குப...