ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ‘ஃப்ரீடம் சேல்’ அறிமுகம்!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 'ஃப்ரீடம் சேல்' அறிமுகம்!
குறைந்த கட்டணமாக ₹1947 -கட்டணத்தில் டிக்கெட்கள் விற்பனை தொடங்கியது!!
சென்னை, 1 ஆகஸ்ட் 2024: இந்தியா தனது சுதந்திரத்தின் 77-வது ஆண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது “ஃப்ரீடம் சேல்” [Freedom Sale] மூலம் வாடிக்கையாகளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்திருக்கிறது. இச்சலுகையின் மூலம் ‘எக்ஸ்பிரஸ் லைட்’ கட்டணங்கள் [Xpress Lite fares] ₹1947 முதல் தொடங்குகின்றன. இச்சலுகை கட்டணத்திலான டிக்கெட்டுகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விருது பெற்ற இணையதளம், airindiaexpress.com பிரத்தியேகமாக கிடைக்கின்றன. இந்த சிறப்பு விற்பனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை முன்பதிவுகளை மேற்கொள்ளலாம்.ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ஸின் உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரிவுகளில் 2024 செப்டம்பர் 30 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளும் பயணங்களுக்...








