OTT-க்கான சிறந்த இசை ஆல்பம் விருதினை வென்ற
OTT-க்கான சிறந்த இசை ஆல்பம் விருதினை வென்ற இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்!
தியேட்டர்களுக்கு இணையாக தற்போது ஓடிடியும் தனித்துவம் வாய்ந்த பொழுதுபோக்கு அம்சமாக இந்திய ரசிகர்களின் வாழ்வில் மாறிவிட்டது. அந்தவகையில், ஓடிடியில் நேரடியாக வெளியாகும் படங்களுக்கும், இணையத்தொடர்களுக்கும் கடந்த சில வருடங்களாக விருதுகள் வழங்கி வரும் Filmfare நிறுவனம் சமீபத்தில் 2025ஆம் ஆண்டிற்கான OTT விருது வழங்கும் விழாவை மும்பையில் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.
ஆலியா பட், விக்கி கெளசல், அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பாலிவுட் திரை பிரபலங்கள் கலந்து கொண்ட இவ்விழாவில், தமிழ் சினிமா இசையமைப்பாளரான ஜஸ்டின் பிரபாகரன் விருது பெற்றது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. மாதவன், ஃபாத்திமா சனா ஆகியோர் நடிப்பில் விவேக் சோனி இயக்கி, நெட்பிளிக்ஸ் OTT-ல் நேரடியாக வெளிவந்த Aap Jaisa Koi என்ற பாலிவுட் படத்திற்காக சிற...








