ACTOR GALLERY, ACTRESS GALLERY, ENGLISH, EVENT GALLERY, EVENT IMAGES, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, PRESS MEET, SOCIAL MEDIA, SOUTH INDIA NEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, Uncategorized
*’ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*
*’ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
படத்தின் நாயகன் வருண் பேசியதாவது, "இந்தப் படத்தில் எனக்கு சிறப்பான அனுபவம் கிடைத்தது. இதன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். என்னை சிறந்த நடிகராக மாற்றிய கெளதம் சாருக்கு நன்றி. அவரது ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் கேட்டது ஒரு ஜாலியான லவ் படம். ஆனால், எனக்கு அவர் கொடுத்தது ஆக்ஷன் படம். 'மாவீரன்', 'ஜவான்' படங்களில் பணிபுரிந்த ய...
